Latestஉலகம்

பிரபல ‘ஹோம் அலோன்’ வீடு ; 7 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விற்பனைக்கு திறப்பு

நியூயார்க், மே 30 – அமெரிக்காவில், படப்பிடிப்புகளுக்கு மிகவும் பிரபலமான ஹோம் அலோன் (Home Alone) வீடு விற்பனைக்கு வந்துள்ளது.

சிகாகோ புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்த வீடு, ஜில்லோ சொத்துகள் விற்பனை தளத்தின் பட்டியல்படி, 52 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 70 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கு விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ளது.

சினிமா வரலாற்றை சொந்தமாக்கிக் கொள்ள இது ஓர் அரிய வாய்ப்பு என அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோம் அலோன் வீடு ஆகக் கடைசியாக, கடந்த 2012-ஆம் ஆண்டு, 15 லட்சத்து 90 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.

1921-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவ்வீடு, அமெரிக்காவின் மிகவும் விலை உயர்ந்த பகுதியான, இல்லினாய்ஸ் மாநிலத்தில், சிகாகோ நகரின், வின்னெட்கா எனுமிடத்தில் அமைந்துள்ளது.

847 சதுர மீட்டரில் அமைந்துள்ள அவ்வீட்டில், நான்கு குளிர்காயும் இடங்கள், ஐந்து படுக்கையறைகள் மற்றும் ஆறு குளியல் அறைகள் உள்ளன.

1990-ஆம் ஆண்டு, அவ்வீட்டில் நான்கு மாதங்களுக்கு ஒளிப்பதிவுச் செய்யப்பட்ட “ஹோம் அலோன்” எனும் ஆங்கில திரைப்படம் பெரியவர்கள் மட்டுமின்றி சிறார்களின் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!