Latestமலேசியா

பிரிந்து சென்ற கணவரால் கொண்டுச் செல்லப்பட்ட 3 வயது மகளை கண்டுப்பிடித்து உதவ பொதுமக்களிடம் தாய் தேவித்திரா கோரிக்கை

ஜோர்ஜ் டவுன் , ஜூன் 28 – தன்னிடமிருந்து பிரிந்திருக்கும் கணவர் கண்ணன் ராஜரத்னம் எனது 3 வயது மகள் K. கிரிஷாவை ( Krisha ) கடந்த ஆண்டு தம்மிடமிருந்து கொண்டு சென்றுவிட்டதால் அவர்களை காணும் பொதுமக்கள் உடனடியாக தன்னிடம் தெரிவிக்கும்படி பினாங்கை சேர்ந்த வி.தேவித்திரா விஸ்வநதான் ( V.Thevitthra Viswanathan ) கேட்டுக் கொண்டுள்ளார்.

9 மாதங்களுக்கு முன் தனது பாதுகாப்பில் இருந்த கிரிஷாவை பார்க்க வந்த கண்ணன் அன்றைய தினம் மாலை ஏழு மணியளவில் எனது மகளை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக தனக்கு தெரியாமலேயே மகளை கோலாலம்பூருக்கு கொண்டுச் சென்றுவிட்டார்.

இதனை தொடர்ந்து இது குறித்து பினாங்கு Pulau Tikus போலீஸ் நிலையத்தில் தாம் புகார் செய்திருப்பதாக தேவித்திரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் எனது மகளை அழைத்துக் கொண்டு கண்ணன் இந்தியா சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தும் அந்த எச்சரிக்கையையும் மீறி கண்ணன் இன்னும் தனது மகளை ஒப்படைக்காமல் இருப்பது குறித்தும் தேவித்திரா கவலை தெரிவித்திருக்கிறார்.

கிரிஷாவின் கடப்பிதழ் தொலைந்துவிட்டதால் புதிய கடப்பிதழை பெற்ற பின் தாம் அக்குழந்தையை சிங்கப்பூருக்கு அழைத்துசென்றதாக பொய்யான புகாரை கண்ணன் செய்துள்ளார்.

எனது மகளை பார்த்தும் அவரிடம் பேசியும் 9 மாதங்களாகிவிட்டன. ஆகக்கடைசியாக 2023ஆம் ஆண்டு செம்டம்பர் 2 ஆம் தேதி கிரிஷாவைவிடம் நான் பேசினேன். பிள்ளையை சந்திப்பதற்கு கண்ணன் வந்திருந்தார். அப்போது அவர் என் மகளை காரில் அழைத்துச் சென்ற பின்னர் இன்றுவரை ஒப்படைக்கவில்லையென தேவித்திரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!