Latestஉலகம்

பிரேசிலில் கொடூரம்: பாதுகாப்பு கயிறு இன்றி பாலத்திலிருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் பரிதாப மரணம்

சாவ் பாவ்லோ, ஜூன்-14 – பிரேசிலில் பாதுகாப்பு கயிறு கட்டப்படாமலேயே, Bungee Jumping போன்ற சாகச விளையாட்டுக்காக 21 வயது இளம் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​சாவ் பாவ்லோ மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற Skeleton Bridge பாலத்தில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

Maria Eduarda என்ற 21 வயது பெண் ‘Rope Jumping’ சாகசத்தில் ஈடுபட முயன்றார்.

​அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், அவரது உடலில் பாதுகாப்பு கயிற்றை (Safety Cord) சரியாக பொருத்த மறந்துவிட்டனர்.

எதிர்பாராதவிதமாக, கயிறு இணைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் அந்தப் பெண்ணை 130 அடி உயரப் பாலத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர்.

​பாதுகாப்பு கயிறு இல்லாததால், அவர் நேரடியாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரக் காட்சி அங்கிருந்தவர்களின் கைப்பேசியில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​இச்சம்பவம் தொடர்பாக, சாகச நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

அதோடு, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!