Latestஉலகம்மலேசியா

பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம்; சபாவில் நில அதிர்வு

பிலிப்பைன்ஸ், ஜூன்-8-இன்று காலை பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், சபாவின் தவாவ், செம்போர்னா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 40 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாலாவ், தைவான் மற்றும் பப்புவா நியூ கினியா (Filipina, Indonesia, Palau, Taiwan dan Papua, New Guinea) நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பானும் தனது சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், பிலிப்பைன்ஸில் ஒரு வணிக வளாகமும், பள்ளிக் கட்டிடமும் இடிந்து விழுந்ததாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!