Latestஉலகம்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்தாமல் தப்பிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

இஸ்தான்புல், பிப்ரவரி 16 – அழகிய முகத்தோற்றத்திற்காக துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல்லில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்ணொருவர், அதற்கான கட்டணத்தைச் செலுத்தாமல் தப்பியோட முயன்றதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டவரான அப்பெண் கடந்த வாரம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக இஸ்தான்புல் சென்றிருக்கின்றார். அறுவை சிகிச்சை முடிந்த கையோடு, ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் லாவகமாக மருத்துவமனையில் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம், மருத்துவமனைப் பணியாளர்கள் கண்ணில் அவர் பட்டுவிட்டார்.

நோயாளி உடை மற்றும் காலில் வெள்ளைச் செருப்புடன் அவர் மருத்துவர்களுடனும் தாதியர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன; அதில் அப்பெண் தப்பியோடாமல் இருக்க மருத்துவர்களும் தாதியர்களும் போராடுவது தெரிகிறது.

வாக்குவாதத்தின் போது, அங்கு யாருக்கும் விளங்காத வெளிநாட்டு மொழியில் அப்பெண் மருத்துவர்களை நோக்கி கடும் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்; நிலைமையைக் கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக அப்பெண்ணை மருத்துவமனையில் அவர் இருந்த கட்டிலிலேயே கொண்டு விட்டிருக்கின்றனர்.

அப்பெண் தப்பியோடுவதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டாலும், அறுவை சிகிச்சைக் கட்டணத்தை அவர் செலுத்தினாரா அல்லது அப்படியே கம்பி நீட்ட இன்னொரு திட்டத்தை போட்டு வருகிறாரா எனத் தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!