
சரவாக், செப்டம்பர் 11 – கடந்த செவ்வாய்க்கிழமை, சரவாக் லாவாஸ், கம்போங் சியாங்-சியாங் லவுட் பகுதியில், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று நள்ளிரவு, அம்முதியவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அவரின் தலையை, கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனர் என்று சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்தது.
தகவல் கிடைக்கப் பெற்றவுடனேயே தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டனர் என்று செயல்பாட்டு தளபதி அவாங் அடானி டமிட் (Awang Adani Damit) கூறினார்.
மீட்கப்பட்ட தலையை கிராமவாசிகள் போலீசாரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் இத்தகைய சம்பவங்களிலிருந்து தங்களைத் தற்காத்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டனர்.