Latestமலேசியா

புகைப்பதற்கு எதிரான சட்ட மசோதா; 2007-ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு, நிகோடின் பொருட்கள் மீதான தடை அகற்றப்பட்டுள்ளது

கோலாலம்பூர், நவம்பர் 28 – 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த மலேசியர்கள், நிகோடின் பொருட்களை வாங்கவோ அல்லது உட்கொள்வதையோ தடைசெய்யும் விதி, 2023 பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடிக்கும் பொருட்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவின் மிக அண்மைய பதிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

அந்த சட்ட மசோதாவின் மிக அண்மைய மூன்றாவது பதிப்பு, இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதில், 2007-ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள், புகையிலை அல்லது மாற்று புகையிலை பொருட்களைப் புகைப்பதைத் தடைசெய்யும் எந்த விதியும் இடம்பெற்றிருக்கவில்லை.

மாறாக, அந்த சட்ட மசோதாவின் 13-வது பிரிவின் கீழ், வயது குறைந்தவர்கள், புகையிலை தயாரிப்பு, புகைபிடிக்கும் பொருள் அல்லது மாற்று புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கும் பொதுவான விதி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

அதே சமயம், வயது குறைந்தவர்கள் புகைபிடிப்பதையோ அல்லது புகையிலைப் பொருளைப் பயன்படுத்துவதையோ தடை செய்யும் விதி, அந்த சட்ட மசோதாவின் 17-வது பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடிக்கும் பொருட்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவின் இரண்டாவது பதிப்பில், 2007-ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள், புகையிலை அல்லது மாற்று புகையிலை பொருட்களைப் புகைப்பதைத் தடைசெய்யும் விதி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2023 பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடிக்கும் பொருட்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா, நாளை நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்கு உட்படுத்தப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!