
புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட் 3 – பினாங்கு ஜாலான் புக்கிட் தெங்கா (Jalan Bukit Tengah) மேம்பாலத்தில் இடம்பெற்ற சாலை விபத்தில் 49 வயதுடைய ஆடவர் ஒருவர் 10 டன் எடையுள்ள லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.
இன்று காலையில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு கிடைத்தவுடனேயே, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், லாரியின் அடியில் சிக்கியிருந்த பாதசாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கியவர் சம்பவ இடத்திலேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் 30 வயதுடைய லாரி ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் சுகாதார அமைச்சின் குழுவினர் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை காலை 10.18 மணியளவில் நிறைவடைந்தது.



