
குவாலா திரெங்கானு, ஆகஸ்ட் 3 – RXZ Members 8.0 நிகழ்வின்போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 1,850 அபராதங்கள் விதிக்கப்பட்டதுடன், 222 மோட்டார் சைக்கிள்கள் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக திரெங்கானு போலீஸ் தெரிவித்துள்ளது.
மேலும், நான்கு உள்ளூர் ஆண்கள், ஒரு உள்ளூர் பெண் மற்றும் 22 வயதுடைய ஒரு சிங்கப்பூர் ஆண் என மொத்தம் ஆறு பேர் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்வின் போது 29 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஐந்து உயிரிழப்பு விபத்துகள் இடம்பெற்று, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 15 போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்பட்டதில், மூவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.



