கோலாலம்பூர், டிசம்பர்-10, புதன்கிழமை வரையில் கனமழைத் தொடருமென மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia எச்சரித்திருந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை மீண்டும் உயர்வு கண்டது.
குறிப்பாக கிழக்குக் கரை மாநிலங்களான திரங்கானுவும் பஹாங்கும் மீண்டும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களைத் திறந்துள்ளன.
சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் தளத்தை ஆகக் கடைசியாகப் பார்த்த போது, 7 மாநிலங்களில்
326 குடும்பங்களைச் சேர்ந்த 1,093 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
ஆக அதிகமாக திரங்கானுவில் 467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஹாங்கில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் நிவாரண மையங்களில் தஞ்சைமடைந்துள்ளனர்.
நெகிரி செம்பிலானில் 251 பேர், ஜோகூரில் 166 பேர், பேராக்கில் 112 பேர், சபாவில் 41 பேர் மற்றும் மலாக்காவில் 11 என எஞ்சிய எண்ணிக்கை உள்ளது.