Latestமலேசியா

புதிய மைகாட் அட்டையை அடையாளம் காண கணினி முறையை மேம்படுத்தும் சேவை வழங்குநர்கள் – தேசியப் பதிவிலாகா விளக்கம்

புத்ராஜெயா, செப்டம்பர்-22,புதியத் தலைமுறை MyKad அடையாள அட்டையைத் துல்லியமாக அடையாளம் காணும் வகையில், அரசு மற்றும் தனியார் துறைகளின் _reader_ கருவிகள் மற்றும் கணினி அமைப்புகள் தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதாக தேசியப் பதிவிலாகா JPN தெரிவித்துள்ளது.

​புதிய அடையாள அட்டையைப் பெற்ற சில பயனர்களின் அட்டைக் குறியீடுகளை, வங்கி மற்றும் அரசு சேவை மையங்களில் உள்ள பழைய _reader_ கருவிகளால் உடனடியாகப் படிக்க முடியவில்லை என்ற புகார்கள் எழுந்த நிலையில், இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

​போலி அடையாள அட்டை தயாரிப்பு மற்றும் தரவு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், மிக நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் _polycarbonate_ தொழில்நுட்பத்துடன் இந்தப் புதிய MyKad தயாரிக்கப்பட்டுள்ளது.

​அனைத்துப் வாடிக்கையாளர் மையங்களும் தங்களின் கணினி அமைப்புகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கான தொழில்நுட்ப வழிகாட்டல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் JPN கூறியது.

​கணினி அமைப்புகளின் மேம்பாட்டுப் பணிகள் முழுமையடையும் வரை, நேரடி ஆவண சரிபார்ப்பு முறைகள் மூலம் பொது மக்களுக்கான சேவைகள் தடையின்றி வழங்கப்படும் என்றும் JPN உத்தரவாதம் அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!