Latestஉலகம்

புயலினால் அமெரிக்க துணையதிபர் கமலா ஹரிஸ் விமானம் வேறு இடத்திற்கு திருப்பிவிடப்பட்டது

வாஷிங்டன், ஜன 10 – அமெரிக்க துணையதிபர் கமலா ஹரிஸ் பயணம் செய்த ஏர் போர்ஸ் 2 விமானம், அட்லாண்டாவிலிருந்து திரும்பும் வழியில் வானிலை புயல் காரணமாக வேறு இடத்தில் தரையிறங்கியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு , அட்லாண்டா, GA ஏர் போர்ஸ் 2-ல் இருந்து செல்லும் வழியில், புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக கூட்டுத் தளமான ஆண்ட்ரூசிலிருந்து டல்லஸ் அனைத்துலக விமான நிலையத்திற்கு அவ்விமானம் திருப்பி விடப்பட்டது என்று ஹரிஸின் செய்தித் தொடர்பாளர் கிர்ஸ்டன் ஆலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கமலா ஹரிஸ் சென்ற , விமானம் காற்றின் வேகத்தினால் குறுகிய தூரத்திற்கு திசை மாறியதாக கூறப்பட்டது. விமானம் டல்லசில் பாதுகாப்பாக தரையிறங்கிய பின் கமலா ஹரிஸ் இல்லம் திரும்பினார். கனமழை மற்றும் பலத்த காற்று செவ்வாய்க்கிழமை கிழக்கு கடற்கரையின் ஒரு பெரிய பகுதியைத் தாக்கியது மற்றும் புதன்கிழமை வரை தொடரும் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!