புதுடில்லி, ஏப் 23- புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் தயாரிக்கப்படும் 2 பிராண்டுகளின் மசாலா பொருட்களின் பயன்பாட்டிற்கு சிங்கபூரிலும் ஹங்காங்கிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டாளர்கள், MDH மற்றும் Everest ஆகிய இரண்டு பிரபலமான இந்திய மசாலா பிராண்டுகளின் சில தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருள் கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து உற்பத்தி பிரிவுகளிலிருந்தும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு இந்தியஅரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
MDH மற்றும் Everest மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து மசாலா தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் மாதிரிகள் எடுக்கப்படவும் உத்தரவு பிறப்பட்டுள்ளது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உணவுக் கட்டுப்பாட்டாளர்கள், “அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும் அளவுகளில்” Ethylene oxide”, அதாவது இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மசாலா பிராண்டுகளின் நான்கு பொருட்களான, MDHன் தயாரிப்பில் மெட்ராஸ் கறி தூள், சாம்பார் மசாலா, மற்றும் கறி பொடியும், எவரெஸ்ட் நிறுவன தயாரிப்பில் மீன் கறி மசாலா ஆகியவை தடைசெய்யப்பட்ட அந்த பொருட்களாகும்.