Latestமலேசியா

பூமிபுத்ராக்களும் மற்ற சமூகத்தினரும் உண்மையாக இணைந்து பணியாற்ற வேண்டும் – ஸாஹிட் வலியுறுத்து

புத்ரா ஜெயா, பிப் 29 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்திய முதலாவது பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டை இன்று தொடங்கிவைத்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ Ahmad Zahid Hamidi , மலேசியாவின் பூமிபுத்ரா மற்றும் பிற சமூகங்களுக்கு இடையே உண்மையான பொருளாதார ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார். இரண்டாவது பிரதமரான மறைந்த துன் அப்துல் ரசாக் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையில் இருந்து இனங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு இருந்து வருகிறது. எனினும் ஒத்துழைப்பின் சில அம்சங்கள் கேள்விக்குரிய உண்மைத்தன்மையைக் கொண்டிருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இனங்களுக்கிடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் தீர்மானங்கள் மூலம் மூன்று நாள் மாநாடு இதனை சரி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பூமிபுத்ரா பொருளாதார மாற்றம் திட்டத்தின் மூலம் பூமிபுத்ரா என்ற பெயரில் மட்டும் பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. Ali யும் Babaவும் அதாவது மலாய்க்காரர்களும் சீனர்களும் வணிகம் செய்ய உண்மையாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என Zahid வலியுறுத்தினார். பூமிபுத்ராவுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகள் நீண்ட காலமாக அரசியல் சாதகமான அம்சங்களாக இருந்து வருகின்றன. தொடக்கத்தில் இந்த இந்த கொள்கைகள் புனிதமானதாக இருந்தலும் சில தலையீடுகள் இறுதியில் அரசியல் வளர்ச்சியாக உருவெடுத்தது, இறுதியில் அம்னோ உயர்மட்ட தலைவர்களுக்கு வேண்டிய அணுக்கமான சிறு கும்பல்களுக்கு அல்லது சிறு வட்டத்திற்கு மடடுமே நன்மையை கொடுக்கும் கலாச்சாராமாக வளர்ந்ததாக Zahid விவரித்தார்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு நமது பொருளாதாரத்தை சரிப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். இனி பொருளாதார நடவடிக்கைகள் இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது. அந்த சுவர் இப்போது இடிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!