Latestஇந்தியாமலேசியா

பெண் சக்தி மாநாடு 2026: புகனேஸ்வரிக்கு ‘நாரி சக்தி’ சிறப்பு விருது; SMCக்கு அனைத்துலக அங்கீகாரம்

கோலாலம்பூர், ஏப்-7- அண்மையில் தமிழகத்தில் சென்னை நகரில் நடைபெற்ற இரண்டாவது பெண் சக்தி மாநாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பெண்சக்தி அமைப்பின் தலைவரான புகனேஸ்வரி சண்முகம் தனது தலைமைத்துவ ஆற்றல் மற்றும் சமூகப் பணிக்காக NARI SAKTHI EXCELLECE AWARD விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

சமத்துவத்திற்கான முன்னேற்றத்தை நோக்கி என்ற கருப்பொருளில் அமைந்த இந்த மாநாடு பெண்களின் சாதனைகளை கொண்டாடும் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது.

கடந்த 50 ஆண்டு காலமாக மலேசியாவில் இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காக பணியாற்றிவரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக இந்த விருதை கருதுவதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான புகனேஸ்வரி தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த இந்திய பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு பெண்களின் சாதனைகளை கொண்டாடும் முக்கிய மாநாடாக கருதப்பட்டது .

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் பெயரில் Nari Sakthi அமைப்பு செயல்பட்டு வருகிறது ஐ,நாவின் கோட்பாட்டிற்கு ஏற்ப தலைமைத்துவ மேம்பாடு மற்றும் பெண்களுக்கான முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு வளர்ச்சி மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது தமக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுவாக புகனேஸ்வரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!