
புக்கிட் மெர்தாஜம், மே 25 – ஜூரு சிறு தொழில்மய வட்டாரத்தில் நேற்றிரவு நிகழ்ந்த தீவிபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின்
தங்கும் விடுதி அழிந்தன.
இரவு மணி 8.23க்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
ஆரோக்கிய பானங்கள் மற்றும் சமையல் தளவாட தயாரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் அருகருகே இருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட தொழிற்சாலைகள் தீக்கிரையாகின.
அந்த தீவிபத்தில் 55.74 சதுர மீட்டர் அளவைக் கொண்ட தொழிலாளர் தங்கும் விடுதியும் அழிந்ததாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜோன் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
அந்த தொழிற்சாலைகள் மற்றம் தங்கும் விதியில் இருந்த எட்டு தனிப்பட்ட நபர்கள் பாதுகாப்புடன் உயிர் தப்பினர். இரண்டு மணி நேரங்களுக்குப் பின் இரவு மணி 10.22 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.



