Latestஉலகம்மலேசியா

பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை

ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மாடிக் கட்டிடம் இடிந்து , அருகிலிருந்த ஹோட்டல் மீது விழுந்ததில் அதில் தங்கியிருந்த மலேசிய விருந்தினர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

எனினும் அவர்களில் ஒருவரின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால் உயிரிழந்தார். மற்றொருவருக்கு அதிகாலை 3 மணியளவில் மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.

அவர் இடிபாடிகளில் சிக்கியிருந்ததால் மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை .

இந்த பேரிடரின்போது கட்டுமானத் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த, பெரும்பாலும் கட்டுமானத் தொழிலாளர்களான பதினேழு பேர் காணவில்லையென தீயணைப்புப் படையின் பெண் பேச்சாளர் மரியா லியா சஜிலி ( Maria Leah Sajili ) தெரிவித்தார்.

அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.

அந்த கட்டுமானப் பகுதியில் 70 பேர் வேலை செய்து வந்ததாகவும் வார இறுதி விடுமுறையின் காரணமாக பலர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!