Latestஉலகம்

பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு வேற்றுக் கிரகவாசிகளின் உடல்கள் ; உண்மையில் பொம்மைகளா?

மெக்சிகோ, ஜன 14 – கடந்தாண்டு பெருவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட இரு வேற்றுக் கிரகவாசிகளின் உடல்கள், உண்மையில் பொம்மைகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இரு வேற்றுக்கிரகவாசிகளின் உடல்களும், மனித மற்றும் விலங்குகளின் எலும்புகளை கொண்டு தயார் செய்யப்பட்ட பொம்மைகள் என்பதை, அறிவியலாளர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

எனவே, அவை வேற்றுக்கிரகவாசிகள் என கூறப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்தாண்டு பெருவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட அந்த இரு வேற்றுக்கிரகவாசிகளின் உடல்களும் பல்வேறு சர்ச்சைகளை தூண்டியிருந்தன.

குறிப்பாக, கடந்த செப்டம்பரில், அந்த உடல்களுடன், மெக்சிகோ நாடாளுமன்றத்தில் பேசிய, அந்நாட்டின் செய்தியாளரும், தன்னை வேற்றுக்கிரகவாசிகளின் ஆர்வலர் எனவும் கூறிக் கொண்ட ஜெமி மோசன் (Jaime Maussan), அவை உண்மையில், 700 ஆண்டுகள் பழமையான வேற்றுக்கிரகவாசிகளின் உடல்கள் எனவும், மருத்துவர்கள் கூட அதனை ஒப்புக் கொண்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!