கோலாலம்பூர், ஜூன் 26 – பெல்க்ரா (Felcra) விவகாரம் தொடர்பில் அரசு நிறுவனத்தின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC , நிதி முறைகேடு காரணமாக கைது செய்திருப்பதை அரசாங்க பொது கணக்குக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. எம்.ஏ.சி.சி விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம் என பொது கணக்குக் குழுவின் தலைவர் டத்தோ மாஸ் எமியாத்தி சம்சுடின் ( Mas Ermieyati Samsudin ) தெரிவித்தார். பெல்க்ரா மூத்த அதிகாரிகளை கைது செய்ய வழிவகுத்த பல தகவல்கள் MACC நடவடிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன என்று கடந்த மாதம் பொது கணக்குக் குழுவின் மூத்த உறுப்பினர் ஜாஹிர் ஹசான் (Zahir Hassan ) தெரிவித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு MACC எடுத்த உடனடிய நடவடிக்கையில் பெல்க்ராவில் நிதி முறைகேடு நடந்திருப்பதை MACC கண்டுப் பிடித்தது. அதிகாரத்தை தவராக பயனப்டுத்திதாகவும் 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வளர்ச்சித் திட்டத்திற்காக நிதி அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் சந்தேகத்தின் பேரில் ஒரு அரசாங்க நிறுவனத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளை மே மாதம் புத்ரா ஜெயா MACC அதிகாரிகள் கைது செய்தனர்.