கோலாலம்பூர், ஜூன் 25 – தனது விமானங்களில் ஒன்றில் கேபின் அழுத்தம் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. நேற்று கோலாலம்பூரில் இருந்து Bangkok புறப்பட்ட MH780 விமானம் கேபின் அழுத்த பிரச்சனை காரணமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு திரும்பியதாக மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த விமானத்தின் விமானிகள் அவசரமாக தரையிறங்ககும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் கேபின் உயரத்தை மீறவில்லை மற்றும் பயணிகள் ஆக்ஸிஜன் முகமூடிகளை பயன்படுத்தவில்லை. விமானம் நிலைத்தன்மையோடு KLIA விமான நிலையத்திற்கு திரும்பியது. அது இரவு 8.18 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.