Latestமலேசியா

பேரரசர் வழங்கிய நிதி, போக்குவரத்து அமைச்சின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் ; கூறுகிறார் லோக்

கோலாலம்பூர், ஜூன் 20 – வாகன பதிவு எண் ஏலம் மூலம், பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய 17 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நிதி, போக்குவரத்து அமைச்சின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

குறிப்பாக, FlySiswa எனப்படும் தீபகற்ப மலேசியாவுக்கும், சபா, சரவாக் மாநிலங்களுக்கு ம் இடையில் பயணிக்கும் மாணவர்களுக்கு விமான டிக்கெட் உதவித் தொகை வழங்குவது, B40 பிரிவினருக்கான MyLesen வாகனம் ஓட்டும் அனுமதி மற்றும் ஹெல்மெட்டுகளை மாற்றி தருவது ஆகிய திட்டங்களுக்கு அந்நிதி பயன்படுத்தப்படுமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அதனால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்த தொகையை வழங்கியுள்ள பேரரசருக்கு, அந்தோணி லோக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக, FFF1 வாகன பதிவு எண்ணை வாங்கியதன் மூலம், தாம் கொடுத்த 17 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பணம், மக்கள் நலன் பேணும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமென, பேரரசர் தமது முகநூல் பதிவு வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!