Latestமலேசியா

பேராக்கில் பொறாமையின் உச்சத்திற்குச் சென்ற கணவனால் சித்ரவதைக்கு ஆளான ஆசிரியை

கெரிக், ஏப்ரல்-15, பேராக் கெரிக்கில் பொறாமையும் சந்தேக குணமும் கொண்ட கணவனால் ஆசிரியை ஒருவர் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார்.

இன்னோர் ஆடவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி மனைவியை அடித்து காயப்படுத்தியதோடு, கொலைச் செய்யப் போவதாகவும் அந்நபர் மிரட்டியுள்ளார்.

Kampung Baru Alai-யில் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அதில் அந்த ஆசிரியையின் உடலில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதுடன், அவரின் வலது மார்பகத்தில் மெழுகுவர்த்தி பட்ட தளும்பும் காணப்பட்டது.

தூங்கிக் கொண்டிருந்த மனைவியை வலுக்கட்டாயமாக எழுப்பி, இரு கைகளையும் கட்டிப் போட்ட 42 வயது அவ்வாடவர், இன்னொரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை ஒப்புக் கொள்ளச் சொல்லி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியிருக்கிறார்.

மனைவியின் சட்டையைக் கிழித்து, கழுத்தில் இருந்த சங்கிலியையும் அவர் பலங்கொண்டு இழுத்ததில் அது அறுந்தே போனது.

மனைவி அக்குற்றச்சாட்டை மறுக்கவே, கோபத்தில் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அது அவரின் மார்பகத்தில் உருகி வழியச் செய்திருக்கிறான்.

கள்ளத் தொடர்பை ஒப்புக் கொள்ளவில்லை என்றால் மனைவி என்றும் பாராமல் வீட்டோடு எரித்து விடப் போவதாகவும் அந்நபர் மிரட்டியுள்ளார்.

எனினும் கழிவறைக்குச் செல்வதாகக் கூறி எப்படியோ கணவனை ஏமாற்றி, தனது காரில் தப்பிய ஆசிரியை, அதிகாலை ஒன்றரை மணிக்கு Kampung Lalang போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதீத பொறாமையும் சந்தேக குணமும் கொண்ட கணவர், மனைவி எந்தவோர் ஆணுடனும் பேசுவதற்குத் தடை விதித்து வந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேல் விசாரணைத் தொடருவதாக பேராக் போலீஸ் தலைவர் Datuk Seri Mohd. Yusri Hassan Basri கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!