Latestமலேசியா

பேராக்கில் மருத்துவமனைக் கட்டுமானப் பகுதியின் சாக்கடையில் பெண் சிசுவின் சடலம் கண்டெடுப்பு

ஸ்ரீ இஸ்கண்டார், மார்ச் 11 – பேராக் , ஸ்ரீ இஸ்கந்தார் புதிய மருத்துவமனையின் கட்டுமானப் பகுதிக்கு அருகிலுள்ள சாக்கடையில், புதிதாகப் பிறந்த பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் வாக்கில் தகவல் கிடைத்து தாங்கள் அங்குச் சென்றதாக பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் Hafezul Helmi Hamzah தெரிவித்தார்.

உடன் எந்தவொரு அடையாளமும் இல்லாமல், தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் அக்குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அதன் உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை என்பது தொடக்கக் கட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

குழந்தையின் மரணத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய திங்கட்கிழமை சவப்பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

அக்குழந்தை அங்கு வீசப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் யாராவது இருப்பின் , போலீசைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!