Latestமலேசியா

பேராக்கில் முன்னாள் காதலியின் காதலன் கொலை; தோட்டத் தொழிலாளி மீது குற்றச்சாட்டு

பத்து காஜா, ஜூன்-18-தனது முன்னாள் காதலியின் காதலனை கடந்த வாரம் கொலை செய்ததாக தோட்டக்காரர் ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட் மஸ்லான் (Mohd Harith Mohd Mazlan) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 30 வயதுடைய குற்றஞ்சாட்டப்பட்ட நபரான பரிசால் முகமட் சுல்கிப்ளி ( Farizzal Mohd Zulkifli ) அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தான் .

கொலைக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் அந்த நபரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மத்திய பேரா மாவட்டத்தில் ஜாலான் டிரான்ஸ் பேராக்கில் பிரதான சாலையோரத்தில் 29 வயதுடைய முகமட் பாமி அப்துல்லா (Muhammad Fahmi Abdullah) என்ற குத்தகையாளருக்கு மரணம் ஏற்படுத்தியதாக பரிசால் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜூன் 10 ஆம் தேதி விடியற்காலை 4.30 மணிக்கும் 5.49 மணிக்குமிடையே இக்குற்றத்தை புரிந்ததாக தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அந்த நபர் மீது இந்த குற்றச்சாட்டு கொண்டு கொண்டு வரப்பட்டது.

பரிசாலுக்கு ஜாமின் அனுமதிக்கப்படவில்லை என்பதோடு அந்நபருக்கு எதிரான குற்றச்சாட்டு ஜூலை 20 ஆம்தேதி மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!