Latestமலேசியா

பேராவில் இவ்வாண்டு 2 புதிய மருத்துவமனைகளும் 2 புதிய கிளினிக்குகளும் செயல்படும் – சிவநேசன்

ஈப்போ, ஏப் 2 – பேராவில் இந்த ஆண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய மருத்துவமனைகளுடன் இரண்டு புதிய கிளினிக்குகளும் விரைவில் திறக்கப்படவுள்ளன.

ஸ்ரீ இஸ்கந்தாரில் 147 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவமனையும், பாரிட் புந்தாரில் 136 மில்லியன் ரிங்கிட் செலவில் அமைக்கப்பட்ட புதிய மருத்துவமனையும் இவ்வாண்டு திறக்கப்படும்.

அதே வேளையில் பங்கோரில் 34 மில்லியன் ரிங்கிட் செலவிலும் ஆயர்தாவாரில் 18 மில்லியம் ரிங்கிட் செலவிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கிளினிக்குகளும் திறக்கப்படவிருப்பதாக மனித வளம், சுகாதாரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் பேரா இந்திய சமூக விவகாரத்திற்கான ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

மக்களின் சுகாதார நலனை பாதுகாக்கவும் அத்துறையை மேம்படுத்தவும் முன்னுரிமை வழங்கும் உரிய நடவடிக்கைக்கு மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக சிவநேசன் தகவல் தெரிவித்தார்.

இன்று காலையில் பேரா மாநில சுகாதார இயக்குன Dr. Feisul Idzwan bin Mustapha வை சந்தித்தப் பின்னர் இந்த விவரங்களை செய்தியாளர்களிடம் சிவநேசன் வெளியிட்டார்.

இதனிடையே தமது அலுவலகத்தில் பாரிட் புந்தாரில் உள்ள மகா முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு 37,675 ரிங்கிட், கோப்பெங் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 30,000 ரிங்கிட் மற்றும் கம்போங் கப்பாயாங் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு 50,000 ரிங்கிட் மானியத்தை அவர் வழங்கினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!