Latestமலேசியா

பேருந்து தாமதமாக வந்ததற்காக மன்னிப்புக் கோரும் LED வாசகம்; மாணவர்களின் மனதை நெகிழ வைத்த பேருந்து ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு

கோலாலம்பூர், நவம்பர் 17 – பேருந்து தாமதமாக வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஆனால், அவ்வாறு நிகழும் போது, அதற்காக அன்றாடம் யாரும் யாரிடமும் மன்னிப்புக் கேட்பதில்லை.

எனினும், அந்த வழக்கத்து மாறாக, அதிக நேரம் காத்திருந்த பயணிகளிம், LED முறை வாயிலாக மன்னிப்புக் கோரும் வாசகத்தை பதிவிட்ட RapidKL பேருந்து ஒன்று வைரலாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட பேருந்தின் முன் LED முறையில், “தாமதம் ஆனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். விரைவில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு விடுகிறோம்” எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ள 21 வினாடி காணொளி ஒன்றை, அப்பேருந்தில் ஏறிய ரெட்ஜா எனும் மாணவர் தமது @frdsrefza.xllt எனும் டிக் டொக் கணக்கில் பதிவிட்டதை தொடர்ந்து அது வைரலாகியுள்ளது.

அந்த பேருந்து சரியான நேரத்திற்கு வந்து விட்டது. எனினும், காத்திருந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அதன் ஓட்டுனர் நடந்து கொண்டது பலரை நெகிழ செய்ததாக ரெட்ஜா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவை இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; பலர் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனரை பாராட்டி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!