Latestமலேசியா

போங்க் ராக்யாட் இந்திய தொழல்முனைவர் BRIEF-i கடனுதவி திட்டம்; 43 பேருக்கு RM3.8 மில்லியன் கடனுதவி

கோலாலம்பூர், ஜூன் 28 – பேங்க் ராக்யாட்  இந்திய தொழில் முனைவர்  கடனுதவி BRIEF -i திட்டத்திற்கு மனு செய்திருந்த  43 விண்ணப்பதாரர்களுக்கு 3.8 மில்லியன் ரிங்கிட் கடனுதவி  அங்கீகரிக்கப்பட்டது.  ஜூன் 27 ஆம் தேதிவரை  (BRIEF-i )   திட்டம் குறித்து   நாடு முழுவதிலும்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விளக்கம் கோரியிருப்பதாக   தொழில் முனைவர் மேம்பாடு கூட்டுறவு  துணையமைச்சர்  டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  தெரிவித்தார்.  

இவற்றில்  5.7 மில்லியன்  ரிங்கிட்  கடனுதவிக்காக  135 பேரின் விண்ணப்பங்கள்  பரிசீலிக்கப்பட்டு வருவதாக இன்று  BRIEF -i   உதவி திட்டத்திற்கு   தகுதி பெற்ற தொழில் முனைவர்களுக்கு  காசோலை வழங்கும் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு உரையாற்றியபோது  ரமணன் இதனை தெரிவித்தார். 

இதனிடையே  இந்த  BRIEF  i  கடனுதவி திட்டத்தில் கடன் பெற்றவர்களில் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்களது கருத்துக்களை  பகிர்ந்து கொண்டனர் 

அரசாங்கத்திற்கும்  Bank Rakyat   ஒத்துழைப்பின் மூலம் குறிப்பரிக BRIEF -i கடனுதவி திட்டத்தின்வழி  அதிகமான  இந்திய தொழில் முனைவர்கள் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவதற்கான கடனுதவியை பெறமுடியும் என  ரமணன் தெரிவித்தார்.   சிறுபான்மை இந்திய சமூகத்தின்  தொழில் முனைவர்களுக்கு  உதவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒன்றுமை அரசாங்கத்தின்  முயற்சிகளில்  மற்றொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக  BRIEF -i  கடனுதவி திட்டம் அமைவதாகவும் இதனை இந்திய தொழில் முனைவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென டத்தோ ரமணன்  கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!