Latestஉலகம்

போர்ச்சுகல் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் கால்பந்து ஜாம்பவான் Cristiano Ronaldo – ரசிகர்கள் அதிர்ச்சி

லிஸ்பன், நவ-06-போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் Cristiano Ronaldo, தமது 41ஆவது வயதில் அனைத்துலக கால்பந்து அரங்கில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அதன் மூலம், 23 ஆண்டுகளாக நீடித்த அவரது தேசிய அணிப் பயணம் ஒரு முடிவுக்கு வருகிறது.

போர்ச்சுகல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடியுள்ள Ronaldo, 146 கோல்களை அடித்து அனைத்துலக கால்பந்தில் அதிக கோல்கள் புகுத்திய வீரர் என்ற உலகச் சாதனையைப் படைத்துள்ளார். ஐந்து முறை Ballon d’Or விருதை வென்றுள்ள அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார்.

தேசிய அணியின் ஏழாம் எண் சீருடையை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டார். 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய தமது கால்பந்து பயணம் வாழ்க்கையையே மாற்றியதாகவும், தமது முடிவு எளிதில் எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற உதவியது, அனைத்துலக அரங்கில் Ronaldoவின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இறுதியாட்டத்தின்போது காயம் காரணமாக அவர் பாதியிலேயே திடலை விட்டு வெளியேறிய போதிலும் அவ்வாட்டத்தில் அவரது பங்கு அளப்பரியதாகும்.

அதோடு இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அவர் மூன்று கோல்களை அடித்தார். எனினும், போர்ச்சுகல் அணி 16 அணிகள் சுற்றில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இதனிடையே, அண்மைய காலமாக Ronaldoவின் ஆட்டத்திறன் குறித்த விமர்சனங்களும், பயிற்றுனர் Jorge Jesusசுடனான கருத்து வேறுபாடு குறித்த தகவல்களும் வெளியாகியிருந்தன. கடந்த மாதம் நடைபெற்ற Nations League போட்டியின்போது அவர் களமிறக்கப்படாததைத் தொடர்ந்து, பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியதாகவும், அவருக்கு 30 நாள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் Ronaldoவின் ஓய்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அவரது அம்முடிவு போர்ச்சுகல் கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!