Latestமலேசியா

கிளந்தானில் உடும்பை சர்வ சாதாரணமாக இழுத்துச் சென்ற பெண் – வலைத்தளங்களில் வைரலான காணொளி!

கோத்தா பாரு, நவ-06-கிளந்தான், பச்சோக்கில் உள்ள உணவகமொன்றினுள் நுழைந்த உடும்பை, பெண் ஒருவர் துணிச்சலுடன் இழுத்துச் சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிக்டாக்கில் வைரலான காணொளியில், அப்பெண் உடும்பை இழுத்துக் கொண்டு உணவகத்திற்கு வெளியே வரும் காட்சிகள் உள்ளன. பொதுவாக மக்கள் நெருங்குவதற்கே அச்சப்படும் உடும்பை அவர் எவ்வித பயமும் இன்றி கையாண்ட விதம் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அக்காணொளியைப் பார்த்த பலர் அப்பெண்ணின் தைரியத்தைப் பாராட்டியதுடன், நகைச்சுவையான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். அப்பெண்ணுக்கு திருமணத்தின்போது வழங்கப்படும் ‘hantaran’ எனப்படும் பரிசுத் தொகை அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர். மற்றொருவர், அவர் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாக இருக்க வேண்டும். அது பல்லி அல்ல என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, சில இணையவாசிகள், விலங்குகள் மீதான அருவருப்பு உணர்வே சில நேரங்களில் எதிர்பாராத துணிச்சலான செயல்களைச் செய்ய வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்திற்குப் பின் அப்பெண் தனது கைகளை நன்றாகக் கழுவியிருப்பார் என்றும் ஒருவர் நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!