Latestமலேசியா

போர்ட் கிள்ளானில் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் சுங்க அதிகாரிகள் உட்பட 17 பேர் கைது; 4 மில்லியன் ரிங்கிட் பறிமுதல்

புத்ரா ஜெயா , ஜூன் 12 – போர்ட் கிள்ளான் துறைமுகத்தில் கடத்தல் நடவடிக்கையில்  சம்பந்தப்பட்டதன் தொடர்பில்     சுங்க அதிகாரிகள் உட்பட  17பேர்     MACC  எனப்படும் ஊழல்  தடுப்பு ஆணையத்தினால்  கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து   4.4 மில்லியன் ரிங்கிட்   பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட  17 தனிப்பட்ட நபர்களில்    11 பேர் சுங்க அதிகாரிகள் , இதர ஆறு சந்தேகப் பேர்வழிகள்  நிறுவன இயக்குனர்கள், அதன் பணியாளர்கள்   மற்றும் அவர்களுக்கு வேண்டிய நெருக்கமானவர்களும் அடங்குவர்.  

மேலும் 28,000 ரிங்கிட் மதிப்புள்ள    நான்கு  யமஹா  XMAX ( Yamaha XMAX) மோட்டார் சைக்கிள்கள் ,  200,000 ரிங்கிட்டிற்கும் மேலான   Toyota Alphard  வாகனம்,  ஒரு BMW  கார், நகைகள், ஆடம்பர கடிகாரங்கள்,   ஒரு புளோட்  நிலம் ஆகியவயும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவை அனைத்தும்  ரொக்கத் தொகையினால் வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.   மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான   MACC விசாரணையின்போது  இவை அனைத்தும்  கண்டுப்பிடிக்கப்பட்டு  தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும்   RM2mil ரிங்கிட் மதிப்புள்ள  தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான  12 வங்கிக்   கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!