
கிள்ளான், நவ 8 – போர்ட் கிள்ளான் வட்டாரத்தில் பழமையான பள்ளியாக திகழும் வாட்சன் தமிழ்ப்பள்ளியில் 1982–1987 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களது 50 வயது நிறைவை முன்னிட்டு மறுமலர்ச்சி விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.
தெலோக் பாங்லிமா கராங்கில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 45 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
மரணம் அடைந்த 13 முன்னாள் மாணவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மௌன அஞ்சலியுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
43 ஆண்டுகளுக்கு முன் ஒரே பள்ளியில் இணைந்த இம்மாணவர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வெற்றியடைந்திருந்தாலும், அவர்களை இணைக்கும் பந்தம் இன்னும் வலுவாகவே இருந்து வருதையும் காணமுடிகிறது.
இவ்வேளையில் இந்த ஒன்றுகூடலை வருடந்தோரும் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.



