Latestஉலகம்

போலி ஆவண தயாரிப்பு வழக்கில் Donald Trump குற்றவாளியே என நீதிமன்றம் தீர்ப்பு; அதிபராகும் கனவில் மண் விழுமோ என ஆதரவாளர்கள் கவலை

நியூ யோர்க், மே-31, போலியாக வர்த்தக ஆவணங்களைத் தயாரித்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump குற்றவாளியே என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Trump மீதான அனைத்து 34 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக 12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அறிவித்தது.

2 நாட்களாக விவாதித்து ஏகமனதான தீர்ப்பை அக்குழு வழங்கியிருப்பது, Trump-பையும் அவரின் ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அத்தீர்ப்பு மிகவும் அவமானகரமான ஒன்று எனக் கூறி நீதிபதிகளை Trump கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆபாச நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை மறைப்பதற்காக 2016 அதிபர் தேர்தலுக்கு முன் அவருக்கு பெரும் பணத்தை வாரி இறைத்த விவரங்கள் தொடர்பில் Trump மீது அந்த போலி ஆவணங்கள் வழக்குத் தொடரப்பட்டது.

ஜூலை 11-ஆம் தேதி அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது.

மீண்டும் அதிபர் மாளிகைக்குள் நுழையும் கனவில் இருக்கும் Trump, இன்றையத் தீர்ப்பை அடுத்து சிறைவாசம் அல்லது அபராதம் விதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் அபராதம் விதிக்கப்படவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக அரசியலமைப்பு வல்லுந‌ர்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!