Latestமலேசியா

போலி வேலை அனுமதி மோசடி; மியான்மார் பெண் உட்பட 8 பேர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – சட்டவிரோதமாக தற்காலிக வேலைவாய்ப்பு வருகை அனுமதி (PLKS) ஆவணங்களை ஏற்பாடு செய்த கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மியான்மர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் பண்டார் மக்கோத்தா செராஸில் நடத்தப்பட்ட சோதனையில், kaithu செய்யப்பட்ட பெண் உட்பட எட்டு மியான்மார் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் காலாவதியான விசாவுடன் தங்கியிருந்ததுடன், மூவரிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்களும் இல்லை.

சோதனையில் 16 மியான்மார் கடப்பிதழ்கள் , போலி ஆவணங்கள் மற்றும் தொழிலாளர் விநியோக ஆவணங்கள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல் செல்லுபடியாகும் அனுமதி இல்லாத வெளிநாட்டவர்களுக்கு 8,000 முதல் 10,000 ரிங்கிட் வரை வசூலித்து PLKS அதாவது வேலைவாய்ப்பு வருகை அனுமதிகளை ஏற்பாடு செய்து வந்ததாக நம்பப்படுகிறது. அனைத்து சந்தேகநபர்களும் மேல் விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!