
குவாந்தான், ஆகஸ்ட்-3 – இவ்வாண்டின் முதல் காலாண்டில், கிழக்குக் கரை மாநிலங்களிலேயே மிக அதிக தொழிலாளர் பங்கேற்பு விகிதமாக 65.3 விழுக்காட்டை பஹாங் பதிவுச் செய்துள்ளது.
அதேவேளை, அம்மாநிலத்தின் வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 1.9 விழுக்காடாகக் குறைந்து, உற்பத்தி, சேவை, விவசாயம் மற்றும் சுரங்கத் துறைகளில் வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
மனிதவளத் துணையமைச்சர் டத்தோ Khairul Firdaus Akbar Khan அதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில், சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO நடத்தும் MYFutureJobs தளம் மூலம் வேலைதேடுபவர்களும் நிறுவனங்களும் திறம்பட இணைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கடந்த 2023 முதல் இவ்வாண்டு ஜூலை வரை, பஹாங் மாநிலத்தில் 26,000-க்கும் மேற்பட்டோர் இத்தளத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
குவாந்தானில் நடைபெற்ற ‘இந்திரா மக்கோத்தா ‘MYFutureJobs’ வேலைவாய்ப்பு முகாமைத்’ திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இம்முகாமில் 30 நிறுவனங்கள் பங்கேற்று 6,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கின.



