ஷா ஆலாம், ஏப்ரல் 20 – அடை மழையால் Hulu Gombak பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் ஏற்பட்ட மண்ணரிப்பே, கோலாலம்பூர், வங்சா மாஜூ நீர் சுத்திகரிப்பு ஆலையில் (LRA) நீர் அழுக்கடையக் காரணமாகும்.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பார்த்த போது, சேறு கலந்த நீரின் அளவு 400 NTU-வை தாண்டியிருந்ததாக, சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் LUAS தெரிவித்தது.
இதையடுத்தே, ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக வங்சா மாஜூ LRA-வின் செயல்பாடு தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
என்றாலும், வங்சா மாஜூ LRA-வுக்கு கச்சா நீர் வருவது தடைப்படவில்லை; காரணம்,
Klang Gates அணைக்கட்டில் இருந்து நேரடியாக அது அங்கு வந்துக் கொண்டு தான் இருப்பதாக LUAS விளக்கியது.
வங்சா மாஜூ LRA செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், பயனர்களுக்குத் தருவிக்கப்படும் சுத்திகரிக்கப்பட நீரின் தரத்தில் பிரச்னை ஏதும் இல்லை என்றும் LUAS உத்தரவாதம் அளித்தது.