
ஆபயர் கெரோ, மார்ச் 6- கடந்த ஜனவரி மாதம் மதுபோதையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒரு லோரி ஓட்டுநர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நேற்று இங்குள்ள அயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனையும் 10,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது.
இவ்வாண்டு ஜனவரி 17 ஆம் தேதி இரவு மணி சுமார் 11.50 அளவில் ஜாலான் டத்தோ முகமது ஜினில் அவர் இந்தக் குற்றத்தை புரிந்ததாகக் க் கூறப்பட்டது.
அந்த ஆடவரின் மனுவை ஏற்றுக்கொண்டு, அவர் குற்றவாளி எனக் கண்டறிந்து, வழக்கின் முழு உண்மைகள், மேல்முறையீடு மற்றும் அரசு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர், நீதிபதி நூர் அபிகா ராதியா ஜைனுரின்( Nur Afiqah Radhiah Zainurin ) அவருக்கு தண்டனை மற்றும் அபராதத்தை விதித்தார்.
சிறைத்தண்டனை நேற்று தொடங்கும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் அபராதம் செலுத்தத் தவறினால், அவருக்கு ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 33 வயதுடைய அந்த ஆடவர் அபராதம் செலுத்தினார்.



