Latestஉலகம்

மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100 பேர் பலி

ஆப்பிரிக்கா, ஆகஸ்ட் 20 – மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு–கமரூன் (Cameroon) எல்லையில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பாபுவா (Baboua) நகரிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸாம்போயே (Zamboye) சுரங்கத்தில் முடிந்த செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது. இந்நிலையில் நிலத்தடி சுரங்கப்பாதைகள் இடிந்து விழுந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களில் குறைந்தது நான்கு பேர் கமரூனைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர் தப்பியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத சுரங்கங்களில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்கு காரணமெ ன எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!