Latestமலேசியா

மனக்கசப்புகள் மறைந்து மக்களிடையே அன்பின் உணர்வு ஓங்கட்டும்; மாமன்னர் தம்பதியரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல்-10, இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசிய
இஸ்லாமியர்களுக்கும் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா சரித் சோஃபியா இருவரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

புனித ரமலான் மாதம் முழுவதும் முஸ்லீம்கள் மேற்கொண்ட அறப்பணிகள் அனைத்தும், எல்லாம் வல்ல இறைவனால் அருளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படட்டும் என்றும் அவர்கள் வாழ்த்தினர்.

கிடைக்கப்பெற்ற நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக, இன்றுப் பிறந்துள்ள
இந்த Syawal மாதத்தை
மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் வரவேற்போம்.

அதோடு, இன, மத வேறுபாடின்றி, சமுதாயத்தின் அனைத்து மட்டத்தினரும், நட்புறவை வலுப்படுத்தவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த கொண்டாட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வோம் என மாமன்னர் தம்பதியர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பேச்சாலும் செயலாலும் மனம் புண்பட்டிருந்தாலும், அனைத்து
மனக்கசப்புகளும் மறைந்து நம்மிடையே அன்பின் உணர்வு ஓங்கட்டும்; நாட்டிற்கும் அனைத்து மலேசியர்களுக்கும் கருணை, அமைதி, பரிபூரண மற்றும் நீடித்த செழிப்பை வழங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் என, மாமன்னர் தம்பதியர் என்ற முறையில் தங்களின் முதல் ஹரி ராயா வாழ்த்துச் செய்தியில் சுல்தான் இப்ராஹிமும் ராஜா சரித் சோஃபியாவும் கூறினர்.

மலேசியாவில் உள்ள முஸ்லீம்கள் ஒரு மாத நோன்பு முடிந்து இன்று ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடுவர் என, முன்னதாக, அரச முத்திரைக் காப்பாளர் அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!