Latestமலேசியா

மனைவியை 13 முறை கத்தியால் குத்திய சம்பவம் ; நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட கணவன்

கூலிம், செப்டம்பர் 21 – கூலிம், கெடாவில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த 43 வயதான முன்னாள் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதைப் புரிந்துகொண்டதாக அவர் தலையசைத்தார்.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தாமான் தீராம் பகுதியிலுள்ள வீட்டில் 39 வயதான எஸ். சீலாவின் மரணத்திற்குக் காரணமான அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்படாது என அரசுத் தரப்பு தெரிவித்தது. வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை மற்றும் இரசாயனப் பரிசோதனை அறிக்கைகள் பெறப்படவுள்ளன.

முன்னதாக, அந்தப் பெண் 13 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாகவும், பொறாமை காரணமாக சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

சந்தேகநபர் லூனாஸ் காவல் நிலையத்தில் சரணடைந்து, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மடிக்கத்தியையும் ஒப்படைத்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!