புத்ராஜெயா, மே-10, Prasarana-வின் கீழ் செயல்படும் ரயில் சேவைகளின் வழித்தடங்களில் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள, அந்நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தகைய அபாயமுள்ள பகுதிகளை அடையாளம் காண DBKL மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களுடன் Prasarana கலந்தாய்வு நடத்த வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke கூறினார்.
சாலையோர மரங்களின் பராமரிப்பானது ஊராட்சி மன்றங்கள் அல்லது தனியாரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்; Prasarana-வால் அங்கு விருப்பம் போல் நுழைய முடியாது என்றார் அவர்.
எனவே தான் அவற்றுடன் கலந்தாய்வு நடத்தி ஆய்வு மேற்கொள்வது அவசியம்.
குறிப்பாக LRT மற்றும் Monorel வழித்தடங்களில் மரங்கள் சாய்ந்து விழுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க அது உதவியாக இருக்கும் என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமைப் பெய்த கனமழையின் போது Jalan Sultan Ismail-லில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து 17 வாகனங்களை நசுக்கியதில், ஒருவர் பலியான வேளை இருவர் காயமடைந்தனர்.
அருகில் உள்ள Monorel தண்டவாளத்திலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், அந்த ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.