கோலாலம்பூர், மே 8 – Jalan Sultan Ismail லில் மரம் விழுந்ததைத் தொடர்ந்து உடலில் பல பகுதிகளில் காயத்திற்கு உள்ளான சுவிடனைச் சேர்ந்த பெண் ஒருவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த 72 வயது பெண்மணியின் நிலை சீராக இருப்பதாக Dang Wangi துணை OCPD Supt Nazron Abdul Yusof தெரிவித்தார். நேற்று நிகழ்ந்த அந்த சம்பவத்தில் காயம் அடைந்த 26 வயதுடைய ஆடவர் ஒருவர் இன்று காலை 6 மணியளவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார். அந்த சம்பவத்தினால் தங்களது வாகனங்கள் சேதமடைந்தது தொடர்பில் 18 புகார்களை போலீஸ் பெற்றதாக Nazron கூறினார்.
Related Articles
டிக் டோக்கால் தலைமுறை கெட்டு சீரழியும் முன்னர் கடும் நடவடிக்கைத் தேவை – டத்தோ சிவராஜ் வலியுறுத்து
7 hours ago
நிர்வாணப் படங்களை அனுப்பியப் பேராசிரியர்; உயர் கல்வி அமைச்சு மௌனம் காப்பதாக மாணவர் அமைப்பு சாடல்
8 hours ago
Check Also
Close