Latestமலேசியா

மலாக்காவில் சாலையில் சுற்றித்திரிந்த ஒட்டகங்கள்; 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான காணொளி

மலாக்கா , ஜூன் 28 – சாலையில் இரு ஒட்டகங்கள் தப்பியோடுவதும் அதனை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்ற முயற்சிப்பது தொடர்பாக இன்று காலையில் வைரலான காணொளி இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானது என அந்த ஒட்டகங்களின் உரிமையாளர் பக்ரி அலி ( Bakri Ali ) விளக்கம் அளித்துள்ளார்.

பாஷர் மற்றும் பாஷிர் (Bashar dan Bashir ) என்ற ஆண் மற்றும் பெண் ஒட்டகங்கள் சாலையில் தப்பியோடும் காணொளி இன்று காலையிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து நெட்டிஷன்சன் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். அந்த இரு ஒட்டகங்களையும் தாம் வளர்த்து வந்தாக 60 வயதுடைய பக்ரி அலி விவரித்தார்.

48 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியை வெளியிட்ட தனிப்பட்ட நபரின் நோக்கம் என்னவென்று தமக்கு தெரியவில்லையென அவர் தெரிவித்தார். 13 வயது கொண்ட அந்த ஒட்டகங்கள் சுங்கை ஊடாங்கில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தபோது அவை தப்பியோடியதாக அவர் கூறினார். அந்த காணொளியை கண்டு பலர் தம்மிடம் இன்று காலையில் விசாரித்தாகவும் அது பழைய காணொளி என்று கூறியதைத் கேட்டு அவர்களும் நிம்மதி பெருமுச்சு அடைந்ததாக பக்ரி அலி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!