Latestமலேசியா

மலாக்காவில் சுடுதண்ணீர் குளத்திற்கு சென்றவர்களில் 33 பேர் எலி சிறுநீரக நோய்க்கு உள்ளானதாக சந்தேகம்

மலாக்கா, ஜூன் 13 – மலாக்காவில் ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 33 பேர் கடந்த வாரம் சுடுதண்ணீர் குளத்திற்கு வருகை புரிந்ததைத் தொடர்ந்து Leptospirosis கிருமி அல்லது எலி சிறுநீர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இம்மாதம் 7ஆம் தேதி மாணவர் குழுவினரில் ஒரு பகுதியினர் காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் வலியை எதிர்நோக்கியதாக மலாக்கா தெங்கா மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா சுகாதார இயக்குனர் டாக்டர் Ruzita Mustaffa கூறினார்.

அந்த மாணவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னதாக சுடுதண்ணீர் குளத்திற்கு உல்லாச பயணம் சென்று வந்தவர்கள் ஆவர். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் என 78 பேர் அந்த பயணத்தில் கலந்துகொண்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 15 மாணவர்கள், 9 ஆசிரியர்கள் மற்றும் மூன்று காப்பாளர்கள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் வலி பிரச்னைக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!