மலாக்கா, மே 10 – தங்கும் விடுதியில் வைத்து 15 வயது யுவதி ஒருவரை கற்பழித்ததாக, பல்நோல்கு கடையில் பணிப்புரியும் ஆடவன் ஒருவனுக்கு எதிராக இன்று மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 19 வயது முஹமட் டானியல் ஐமான் முஹமட் இர்வான் அஜிஜி எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
இம்மாதம் மூன்றாம் தேதி, இரவு மணி 11 வாக்கில், மலாக்காவிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில் அவன் அக்குற்றத்தைப் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
ஏழாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் அவ்வாடவன் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூன் பத்தாம் தேதி செவிமடுக்கப்படும்