மலாக்கா, ஆகஸ்ட் -22, மலாக்காவில் ஐந்தாண்டுகளுக்கு முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவியைக் கொலைச் செய்த கணவன், தூக்குத்தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.
கொலை வழக்கு விசாரணை நேற்று தொடரப்பட்டிருக்க வேண்டும்; ஆனால்
51 வயது A. கணேசன் தனது வாக்குமூலத்தை மாற்றி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
தவற்றை உணர்ந்து விட்டதாகவும், மனைவி தனக்கு துரோகமிழைத்து விட்டதாகவும் எண்ணியே தாம் அவரைக் கொலைச் செய்ததாகக் கூறிய கணேசன், தூக்குத்தண்டனைக்குப் பதிலாக சிறைத்தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் முறையிட்டார்.
இதையடுத்து ஆயர் குரோ உயர் நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
கொலை வழக்கு நெடுகிலும் 13 சாட்சிகளின் சாட்சியங்கள், அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களை சீர்தூக்கி பார்த்ததில், கொலையாளிக்கு 30 ஆண்டுகள் சிறையே போதுமானது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
சிறைத்தண்டனை, அவர் கைதான நாளான 2019, ஏப்ரல் 29-லிருந்து தொடங்குகிறது.