மலாக்கா, ஜூன் 2 – மலாக்காவில் Jalan Bukit Senjuang கில் Angsana எனப்படும் வேங்கை மரம் விழுந்தபோது மோட்டார் சைக்கிளோட்டி சொற்ப காயத்தோடு உயிர் தப்பிய வேளையில் கார் ஓட்டுனர் ஒருவரும் அச்சம்பவத்தில் உயிர் தப்பினார். பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் Padang Temu தீயணைப்பு நிலையத்திலிருந்து அறுவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர். மரம் விழுந்ததில் மின் கம்பம் ஒன்றும் சேதம் அடைந்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும மீட்புத்துறையின் அதிகாரி Hazalani Jaafar தெரிவித்தார்.
காயம் அடைந்த மோட்டார்சைக்கிளோட்டிக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மருத்துவ அதிகாரிகள் சிகிச்சை வழங்கினர். அந்த சம்பவத்தில் கார் சேதம் அடைந்தது. நேற்று நண்பகல் மணி 2.40 அளவில் மரம் காரில் விழுந்த காட்சியை அக்காரிலிருந்த Dashcam கேமராவின் காணொளியில் பாதிவானது.