Latestமலேசியா

மலாக்கா மெர்லிமாவில் 500 கிலோ கிராம் எடையுள்ள முதலை பிடிபட்டது

மலாக்கா, ஏப் 17 – Merlimau , Kampung Pantai யிலுள்ள Jalan Pantai Siring கில் 500 கிலோ எடையுள்ள முதலை பிடிக்கப்பட்டது. 5 மீட்டர் நீளம் கொண்ட அந்த முதலை காணப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இன்று நன்பகல் மணி 12.06 அளவில் மெர்லிமாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த நடவடிக்கை பிரிவின் தலைவர் Mohd Suffian Abu Bakar தலைமையில் எழுவர் கொண்ட குழுவினர் Jalan Pantai Siring கிற்கு விரைந்தனர்.

அங்கு சென்றடைந்த 10 நிமிடங்களுக்குள் அவர்கள் அந்த முதலையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்களின் உதவியோடு உப்பு நீரில் வாழக்கூடிய அந்த முதலையை ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் வெற்றிகரமாக பிடித்தனர். அந்த முதலை மாநில மற்றும் தேசிய பூங்காத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என தீயணைப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!