Latestமலேசியா

பூலாவ் அங்சாவில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுப் பிடிக்கப்பட்டது

ஷா அலாம், ஏப் 18 – மார்ச் 5 ஆம் தேதி கோலா சிலாங்கூர், Pulau Angsa கடல் பகுதியில் மீட்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவசரமாக தரையிறக்கப்பட்ட MMEA எனப்படும் மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் AW139 ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி 44 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைக்குப் பின் நேற்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திலிருந்து 760 மீட்டர் தொலைவில் Pulau Angsa வுக்கு தெற்கே 1.9 கடல் மைல் தொலைவில் ஹெலிகாப்டரின் வால் பகுதி கண்டறியப்பட்டதை அடுத்து, அதன் மீட்பு முக்குளிப்பு குழுவினரால் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக MMEA தலைமை இயக்குநர் Admiral டத்தோ Hamid Mohd Amin கூறினார்.

“கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட பிறகு, விபத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய பதிவு தரவு பகுப்பாய்வு செய்வதற்காக கருப்பு பெட்டி ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த கருப்புப் பெட்டியில் கடுமையாக சேதம் ஏற்படவில்லையென்பதால் , தரவு பகுப்பாய்வு முடிவுகள் விரைவில் பெறப்படும் என்று Hamid நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். முன்னதாக, 21 முக்குளிப்பார்களை உள்ளடக்கிய தேடும் குழுவினர், வலுவான நீரோட்டங்கள் மற்றும் சகதி நிறைந்த கடற்பரப்பு காரணமாக நீருக்கடியில் சரியாக பார்க்க முடியாத காரணத்தினால் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்நோக்கியதாக Hamid கூறினார்.MMEA தவிர, அரச மலேசிய கடற்படையின் ராயல் மலேசியன் நேவியின் தேசிய ஹைட்ரோகிராஃபிக் சென்டரின் (NHC) சோனார் குழுவினரும் இந்த தேடுதல் நடவடிக்கையில் இணைந்து செயல்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!