Latestமலேசியா

தாரளமயமான வேலை நேரங்களுக்கு தொழிலாளர்கள் மனுச் செய்ய முடியும் – மனித வள அமைச்சர் சிம் தகவல்

கோலாலம்பூர், ஏப் 18 -1955 ஆம் ஆண்டின் வேலை வாய்ப்புச் சட்டத்தின் பிரிவுகள் 60P மற்றும் 60Q இன் படி, நேரம், நாட்கள் மற்றும் வேலை செய்யும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தாரளமயமான வேலை ஏற்பாடுகளுக்கு தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் விண்ணப்பிக்கலாம் என்று மனிதவள அமைச்சர் Steven Sim X இடுகையில் பதிவிட்டுள்ளார். அத்தகைய கோரிக்கைகள் 60 நாட்களுக்குள் முதலாளிகளின் கருத்துக்களை பெறுவதற்காக அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதோடு இவை நிராகரிக்கப்பட்டால், முதலாளிகள் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என அவர் விளக்கினார்.

மனித வள அமைச்சகம், 3K எனப்படும் நலன், திறன்கள்,பணியாளர்களின் செயல் திறன் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதற்கும் மற்றும் நாட்டின் பொருளாதாரப் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக நமது தொழிலாளர் கொள்கைகள் மற்றும் சட்டங்களை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். அதே இடுகையில், 1955 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்புச் சட்டத்தின் புகைப்படத்தையும் Steven Sim இணைத்துள்ளார். இது தாராளமயமான வேலை ஏற்பாடு தொடர்பான விதிகளை எடுத்துக்காட்டுகிறது.சிங்கப்பூரில் உள்ள தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம், வீட்டில் இருந்து அதிக நாட்கள் வேலை செய்யலாம், மேலும் இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் கட்டம் கட்டமாக வேலை நேரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அகப்பக்கம் ஒன்று வெளியிட்ட இடுகைக்கு Steven Sim பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!