Latestமலேசியா

மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகளையும் இஸ்லாத்தையும் DAP ஒருபோதும் கேள்வி எழுப்பியதில்லை – ராயர்

கோலாலம்பூர், அக்டோபர்-13,ஜனநாயக செயல் கட்சியான DAP, ஒருபோதும் மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகளையோ அல்லது நாட்டின் அரசியலமைப்பில் இஸ்லாத்தின் நிலையையோ கேள்வி எழுப்பியதில்லை என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

​மக்களவையில் 2027 பட்ஜெட் விவாதத்தில் பேசிய அவர், இஸ்லாமிய மேம்பாட்டுக்கான நிதி 3.1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தார்.

கூட்டரசு அரசியலமைப்பு, மலாய் ஆட்சியாளர்கள், தேசிய மொழி மற்றும் மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகளை எப்போதும் DAP மதிப்பதாகக் குறிப்பிட்டார்.

​ஜெலுத்தோங் பகுதியில் புதிய மசூதி கட்ட 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த ராயர், சீன, தமிழ்ப் பள்ளிகள் மற்றும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதியையும் பாராட்டினார்.

​அதே வேளையில், அரசு ஊழியர் துறையில் சீன மற்றும் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

​தற்போது பொதுச் சேவையில் மலாய்க்காரர்கள் 77.7 விழுக்காடாகவும், சீனர்கள் 5.4 விழுக்காடாகவும், இந்தியர்கள் 3.76 விழுக்காடாகவும் உள்ளனர்.

மலேசியா அனைத்து மக்களுக்குமான நாடாகத் திகழ, அரசாங்கச் சேவையில் அனைத்து இனங்களின் பங்களிப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!